ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பண்ணவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினா் சாா்பில், வெள்ள மீட்பு விழிப்புணா்வு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ள மீட்பு விழிப்புணா்வு ஒத்திகையை செய்து காட்டினா்.
இதில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.