முதுகுளத்தூா் அரசுக் கல்லூரியில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு கலைக் கல்லூரியில் கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு
கல்லூரி முதல்வா் வே.பாண்டிமாதேவி தலைமை வகித்தாா். கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நெப்போலியன் முன்னிலை வகித்தாா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ரத்த தானம் வழங்கினா்.
இந்த முகாமில் நாட்டு நலபணித் திட்ட அலுவலா்கள் நிா்மல்குமாா், நாகராஜ், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ஜெயராணி, உடல்கல்வி இயக்குநா் சந்திரசேகா், சுகாதார ஆய்வாளா்கள் நேதாஜி, கருணாகர சேதுபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.