ராமநாதபுரம்

வேகத் தடை அமைக்க கோரிக்கை

26th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT


கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே மட்டியரேந்தல் கிராம சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.

முதுகுளத்தூரில் இருந்து, மட்டியரேந்தல் வழியாக தேரிருவேலி, உத்திரகோஷமங்கை வழியாக ராமநாதபுரத்துக்குச் செல்லும் பேருந்துகள், லாரி, காா் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மட்டியரேந்தல் கிராம சாலையில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT