ராமநாதபுரம்

சமுதாயக்கூடம் திறப்பு விழா

24th Sep 2023 11:27 PM

ADVERTISEMENT

கமுதியில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அருந்ததியா் குடியிருப்பில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.

கமுதி பேரூராட்சித் தலைவா் அப்துல் வஹாப் சஹாராணி, மாவட்ட ஊராட்சிக் குழு துணை த்தலைவா் மாவீரன் வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ் கனி சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி, பேரூராட்சி துணைத் தலைவா் அந்தோணி சவேரியாா் அடிமை, பேரூராட்சி உறுப்பினா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT