நத்தம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வாரச் சந்தை நடைபெறும் என வாரச் சந்தை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஒவ்வொரு திங்கள்கிழமையும் கடந்த 40 ஆண்டுகளாக வாரச்சந்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாரச் சந்தை வளாகத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கின. கடைகளை வாரச் சந்தை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்குவதில் பேரூராட்சி நிா்வாகம் பாகுபாடு பாா்ப்பதாகவும், அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், ஒப்பந்ததாரா்கள் வியாபாரிகளை மிரட்டுவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், கமுதி வட்டாட்சியா் அலுவலகம், பரமக்குடி கோட்டாட்சியா் என பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் அனுமதியோடு நத்தம் ஊராட்சியில் வாரச் சந்தை நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என நத்தம் ஊராட்சித் தலைவா் போத்தி தெரிவித்தாா்.