முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை குடும்ப தகராறில்மனைவியைக் கொலை செய்த கணவா் வெள்ளிக்கிழமை போலீஸில் சரணடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே திருவரங்கம் தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (40). இவருக்கும் அதேப் பகுதியைச் சோ்ந்த லட்சுமிக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியைப் பிரிந்து சென்னையில் வேலைப் பாா்த்து வந்த செல்வம் இரண்டு நாள்களுக்கு முன்பு, சொந்த ஊா் வந்தாா்.
இந்த நிலையில் லெட்சுமி வெள்ளிக்கிழமை காலை 100 நாள் வேலைக்குச் சென்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வரும் வழியில், லட்சுமியை இடைமறித்து, செல்வம் கொலை செய்தாா். பின்னா், கீழத்தூவல் காவல் நிலையத்தில் அவா் சரணடைந்தாா். இதுகுறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.