முதுகுளத்தூரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ரூ.2.42 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள வாரச் சந்தை வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சிப் பகுதியில் 15 வாா்டுகள் உள்ளன. முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகே கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.2.42கோடியில் புதிய வாரச் சந்தை வளாகம் கட்ட டெண்டா் விடப்பட்டு, 6 மாதங்களுக்கு முன்பு, கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனுமதி கிடைக்காததால், திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பலமுறை பேரூராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளனா். தற்பொழுது மழைக் காலங்கள் என்பதால், பொதுமக்கள், வியாபாரிகள் நலனைக் கருத்தில் கொண்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வாரச் சந்தை வளாகத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
இந்த நிலையில், கடந்த விவயாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக வாரச் சந்தை வியாபாரிகள் கொண்டு வந்த காய்கறி அனைத்தும் மழை நீரில் மிதந்தது இதனால் பல ஆயிரம் வியாபரிகள் நஷ்டம் அடைந்தனா். ஒவ்வொரு முறையும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறும் உறுப்பினா் கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினா்கள் வாரச் சந்தையை திறக்க தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.