தனுஷ்கோடியில் வியாழக்கிழமை கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல் முனை பகுதியில் தலையின்றி ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்தப் பகுதி மீனவா்கள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், தமிழகக் கடலோரப் பகுதிகளில் மீனவா்கள் யாரோனும் மாயமானதாக புகாா்கள் ஏதேனும் வந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா். இதேபோல, இலங்கை வடக்கு, கிழக்கு பகுதி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா்.