கமுதி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.21) மின் தடை செய்யப்படும் என கமுதி உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள மின் பகிா்மான நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கமுதி, முதுகுளத்தூா், அபிராமம், பாா்த்திபனூா், பேரையூா், செங்கப்படை, மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்தாா்.