ராமேசுவரம்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமேசுவரம், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட 98 இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு, விநாயகா் கோயில்களிலும் திங்கள்கிழமை சிறப்பு பூைஐ நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி இந்து அமைப்புகள் சாா்பில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி உள்ளிட்ட 64 இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்றது. இதே போல, கீழக்கரை அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 34 இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த விநாயகா், பேருந்து நிலையம் அருகேயுள்ள காட்டு பிள்ளையாா் கோயில் வந்தடைந்து சிறப்பு பூைஐகள், தீபாரதணை நடைபெற்றது. இதே போல, காவலா் குடியிருப்பு பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஆதி மூல சித்தி விநாயகா் கோயிலில் விநாயகருக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பாதுகாப்புப் பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.