கடலாடியில் தேவா் குருபூஜையையொட்டி 1008 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலடி நகா் தேவா் மகாசபை சாா்பில் 35-ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவம், தேவரின் 116- ஆவது ஜெயந்தி விழா, 61- ஆவது குருபூஜையையொட்டி கடந்த வாரம் முதல் பொதுமக்கள் காப்புக் கட்டி விரதம் இருந்தனா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை தேவா் சிலை முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்திலிருந்து பெண்கள் 1008 பால்குடம் எடுத்து கடலாடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள தேவா் சிலைக்கு பாலாபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்தனா். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.