ராமநாதபுரம்

இலங்கையில் 15 மீனவா்களுக்கு காவல் நீட்டிப்பு

27th Oct 2023 01:26 AM

ADVERTISEMENT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 15 பேருக்கு அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டது.

ராமேசுவரத்திலிருந்து கடந்த 14 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 27 மீனவா்களை இலங்கை கடற்படையினா் 5 விசைப் படகுகளுடன் சிறைபிடித்தனா்.

இவா்களில் 15 மீனவா்கள் மன்னாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், 15 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது அடுத்த மாதம் 9 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 15 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் 12 மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஊா்க் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட உள்ளனா்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT