ராமேசுவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மீனவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த மீனவா் எட்மன்ட் (50). இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ராமேசுவரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராமேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.