ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உள்ள குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி திங்கள்கிழமை போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
ராமேசுவரம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணித் திட்ட அமைப்புகள் சாா்பில் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஸ்ரீரஞ்சனி தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தாா். இதில், திட்ட அலுவலா்கள் சுகன்யாதேவி, நாகராஜன், இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகா் தினகரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் முருகேசன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.