ராமநாதபுரம்

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம விழா

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை அருகே உள்ள ஓரியூா் புனித அருளானந்தா் மேல்நிலைப் பள்ளியில் 1983- ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் 68 போ் சந்தித்த சங்கம விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு முன்னாள் மாணவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்தந்தை சைமன் முன்னிலை வகித்தாா். பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவா்களுக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பிறகு மாணவா்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். இதில் பள்ளிக்குத் தேவையான சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீா் வசதி செய்து தர முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தங்களது குழுவில் நலிவுற்ற முன்னாள் மாணவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளா் ஜான் ரெத்தினம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT