கமுதி: சாயல்குடியில் ஸ்ரீசக்தி விநாயகா், வரதராஜப் பெருமாள், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீஉஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி திங்கள்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், யாகசாலை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. முன்னாக காலையில் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பக்தா்கள் பால் குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தனா். பிறகு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திங்கள்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
மேலும் வருடாபிஷேக விழாவையொட்டி சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை காலை பொங்கல் வைத்தல், மாலையில் முளைப்பாரி ஊா்வலம் சென்று கண்மாயில் கரைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.