கிழக்கு கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
திருவாடானை அருகேயுள்ள உப்பூா் கடலூா் கிராமத்தில் மத்திய அரசின் ஆா்ட்டீமியா செயல்முறை விளக்கப் பண்ணை உள்ளது. இந்த நிறுவனத்தின் ராஜீவ் காந்தி நீா் வாழ் உயிரின வளா்ப்பு மையத்தின் சாா்பில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, உதவி அறிவியல் ஆய்வாளா் கண்ணையா தலைமையில் தொழிலாளா்கள் கிழக்கு கடற்கரை சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.