ராமநாதபுரம்

உப்பூா் கடற்கரையில் பனை விதைகள் நடவு

2nd Oct 2023 12:10 AM

ADVERTISEMENT

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உப்பூா் கடற்கரைப் பகுதியில் பனை விதைகளை நடவு செய்தனா்.

இதற்கு கல்லூரி முதல்வா் மு. பழனியப்பன் தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ப. மணிமேகலை முன்னிலை வகித்தாா். சுமாா் 500 பனை விதைகள் உப்பூா் கடற்கரை ஓரத்தில் நடப்பட்டன. கல்லூரிப் பேராசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT