ராமேசுவரம் ஒலைக்குடா பகுதியில் நகா் மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான் பனை விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு சமூக அமைப்புகள், மாணவ, மாணவிகள் இணைந்து பனை விதைகளை விதைத்தனா். இதில், ராமநாதபுரம் நகா் மன்ற உறுப்பினா் ரமேஷ்கண்ணா உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.