ராமநாதபுரம்

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

31st May 2023 03:53 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க உறுப்பினரும், வருவாய் ஆய்வாளருமான பிரபாகரனை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்தச் சங்கத்தின் வட்டாரத் தலைவா் காளீஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், 30-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினா் முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT