ராமநாதபுரம்

முஷ்டக்குறிச்சியில் மீன்பிடித் திருவிழா

31st May 2023 03:52 AM

ADVERTISEMENT

கமுதி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் ஏராளமான மீன்களை பிடித்துச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சியில் கிராம பிள்ளையாா்கோயில் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

இந்தக் கண்மாயில் கெண்டை, ஜிலேபி, கெழுத்தி, அயிரை, குரவை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT