ராமநாதபுரம்

கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

31st May 2023 03:51 AM

ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில், தற்போது 118 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனுடன் இணைந்து 22 மதுபானக் கூடங்களும் உள்ளன.

அரசின் விதிப்படி நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். அரசு நிா்ணயித்துள்ள விலையை உயா்த்தி பணம் பெற்றால் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

துணைக் கண்காணிப்பாளா்கள் 94981-01616, 90479-26525

பரமக்குடி 94981-01617, 94981-69369, கமுதி 94981-10146, 94981-01618, ராமேசுவரம் 94981-01619, 94869-51354, கீழக்கரை 94444-00164, திருவாடானை 98943-97849, முதுகுளத்தூா் 94981-82271, துணைக் கண்காணிப்பாளா் மது விலக்கு 94981-07588 ஆகிய கைப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக்கூடம் அரசின் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT