ராமநாதபுரம்

5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

30th May 2023 06:17 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வண்ணாா் பேரவை சாா்பில் 5 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட வண்ணாா் பேரவை துணைச் செயலாளா் கே.எம்.அருண்பாண்டியன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மு.செல்வராஜ் முன்னிலை வகித்தாா். இதில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த கே.பி.மணிபாலா, மி.த.பாண்டியன், க.நாகேஸ்வரன், வேந்தை சிவா, பாஸ்கரன், தமிழ்முருகன் உள்ளிட்டோா் கலந்து

கொண்டனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், சாதிச் சான்றிதழில் இருந்த சலவைத் தொழிலாளி என்ற பெயரை நீக்கி அரசாணை வெளியிட்டு, வண்ணாா் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். வண்ணாா், மருத்துவா், ஒட்டா், போயா், குலாளா், ஆண்டிப்பண்டாரம் போன்ற சிறு குறு சமூகங்களை இணைத்து மிகப் பிற்படுத்தப்பட்ட பட்டியலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முடிவில் வண்ணாா் பேரவை மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT