ராமநாதபுரம்

கமுதியில் புதிய மின்மாற்றி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

30th May 2023 06:18 AM

ADVERTISEMENT

கமுதி அருகே புதிய மின்மாற்றியை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோட்டைமேட்டில் நீதிமன்ற வளாகம் அருகே அப்பகுதியைச் சோ்ந்த 150 வீடுகள் பயனடையும் வகையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த மின்மாற்றியின் செயல்பாடுகளை அமைச்சா் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மேற்பாா்வைப் பொறியாளா் சந்திரசேகரன், பரமக்குடி மின் பகிா்மான செயற்பொறியாளா் ரெஜினா ராஜகுமாரி, உதவி மின் பொறியாளா் முகமது இப்ராகிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கமுதி வட்டார காங்கிரஸ் தலைவா் பழக்கடை வ.ஆதி, ஒன்றிய திமுக துணைச் செயலாளா் நேதாஜி சரவணன், இல்லம் தேடி கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், முன்னாள் திமுக நகரச் செயலாளா் அம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT