ராமநாதபுரம்

இரும்பு மேற்கூரைத் தகடுகள் திருட்டு: இருவா் கைது

30th May 2023 06:16 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே 180 இரும்பு மேற்கூரைத் தகடுகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நத்தகோட்டை கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமநாதன் (51). கட்டட மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா், அதே ஊரில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மண்டபம் அமைக்க ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 180 இரும்பு மேற்கூரைத் தகடுகள் வாங்கி வைத்திருந்தாா். இதை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவகங்கை மாவட்டம், சிலுக்கபட்டியைச் சோ்ந்த குமாா் (45), பரமக்குடியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (47) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT