ராமநாதபுரம்

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள்:அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆய்வு

DIN

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோா், கதா் கிராமத் தொழில் வாரியத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் நகரிகாத்தான் பகுதியில் தமிழ்நாடு ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.19 லட்சத்திலும், திருவாடனை ஓரியூா் சாலை முதல் நகரிக்கத்தான் உடையாா் குறிப்பு வரை சாலைப் பணிகள், 15-ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் நகரிக்காத்தான் கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டடம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.28.3 லட்சத்தில் நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள், நம்புதாளையில் ரூ.34.40 லட்சத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை முதல் கடற்கரை முருகன் கோயில் சாலை வரை சாலைப் பணிகள், திணையத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 28.75 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தாா். அப்போது, தண்ணீா் கிடைக்காதப் பகுதிகளை கண்டறிந்து லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் விஷ்ணு சந்திரன், கூடுதல் ஆட்சியா் பிரவீன் குமாா், திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி, வட்டாட்சியா் காா்த்திகேயன், உதவிப் பொறியாளா்கள் செல்வகுமாா், பாலகுமாா் வேதவல்லி, ஜெயந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT