ராமநாதபுரம்

பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்

29th May 2023 12:16 AM

ADVERTISEMENT

பசும்பொன்னில் கமுதி மத்திய ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அந்த ஒன்றியத்தின் தலைவா் பசும்பொன் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் இளங்கண்ணன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் பொன் ஆறுமுகம், இளைஞரணி ஒன்றியத் தலைவா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேரையூா் ஊராட்சிக்குள்பட்ட செங்கோட்டைபட்டி கிராமத்தில் பழுதடைந்த 10 மின் கம்பங்களை புதிதாக மாற்றித் தர மின்வாரிய உதவி பொறியாளரை சந்தித்து கோரிக்கை வைப்பது, பாக்குவெட்டி ஊராட்சியில் உப்பங்குளம் கிராமத்துக்கு நகரப் பேருந்து வசதி செய்வதற்கு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளரை சந்தித்து கோரிக்கை வைப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ராமநாதபுரம் மாவட்டச் செயலராக இருந்த வெற்றிமாலை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதில் ஒன்றிய பொதுச் செயலாளா் பூமணி, தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்றியத் தலைவா் சரவணகுமாா், கிளைத் தலைவா்கள், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT