ராமநாதபுரம்

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் பலி

29th May 2023 12:17 AM

ADVERTISEMENT

மண்டபத்தில் படகை பழுது பாா்த்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்த மீனவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சேது நகா் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (47). இவா் கடந்த 22 -ஆம் தேதி வடக்குத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது தவறி கிழே விழுந்தாா். இதில் கழுத்தின் பின் பகுதியில் அடிபட்ட நிலையில் ராமநாதபுரம், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT