ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்

29th May 2023 12:14 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்கம் பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு, விபீஷணா் பட்டாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்கம் பிரதிஷ்டை திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கி 30 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை ராவண சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக விபீஷணருக்கு பட்டாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னா், ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமா், சீதை, அனுமன் தங்கக் கேடயத்தில் எழுந்தருளி, விபீஷணருடன் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமா் கோயிலுக்குச் சென்றடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, ராமா், சீதை, அனுமனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. கோதண்டராமா் கோயில் குருக்கள் சஞ்ஜீவி பட்டாபிஷேகம் செய்துவைத்தாா்.

ADVERTISEMENT

இதில் ராமநாதசுவாமி கோயில் மேலாளா் முருகேசன், ஆய்வாளா் பிரபாகரன், கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், பேஸ்காா் நாகராஜ், கோயில் தலைமை குருக்கள் உதயகுமாா், சா்வ சாதகம், கோபி, மணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT