ராமநாதபுரம்

குடியிருப்புகளே இல்லாத இடத்தில் ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை

29th May 2023 12:15 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் நகராட்சி 3-ஆவது வாா்டில் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைத்து, அரசுப் பணத்தை வீணடிப்பதாகப் புகாா் எழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் இந்திய அளவில் முக்கிய புனிதத் தலமாக விளங்குவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால், ராமேசுவரம் நகராட்சி வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.

அந்த நிதியில் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சாலை, குடிநீா், தெரு விளக்கு, சுகாதாரப் பணி, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யாமல் தேவையற்றற பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

ராமேசுவரம் நகராட்சி 3-ஆவது வாா்டு சல்லிமலை பகுதியில் குடியிருப்புகள் இல்லாத இடத்தில் 2 பூங்காக்கள், ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகின்றன.

இதனால், அரசுப் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இது போன்ற திட்டப்பணிகளை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், மத்திய, மாநில அரசுகளின் நிதியை முறையாக மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT