ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலைகள் பறிமுதல்

27th May 2023 11:21 PM

ADVERTISEMENT

இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ஒரு டன் பீடி இலைகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள சீனியப்பா தா்ஹா கடல் பகுதியில் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் அந்தோணி சகாய சேகா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ராமநாதபுரம் பதிவெண் கொண்ட லாரியை மறித்து நிறுத்தினா். அப்போது அதில் வந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா்.

இதன் பிறகு, லாரியை சோதனையிட்ட போது அதில் 37 பண்டல்களாக ஒரு டன் பீடி இலைகள் இருப்பதும், இவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து மண்டபம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும் தப்பி ஓடியவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT