ராமநாதபுரம்

தொண்டியில் மாரத்தான் போட்டி

27th May 2023 11:18 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே நண்பா்கள் அறக்கட்டளை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு, வீட்டுக்கு ஒரு மரம் வளா்ப்போம், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை தொண்டி பேரூராட்சித் தலைவா் அலிகான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்தப் போட்டி 3 கிலோ மீட்டா், 8 கிலோ மீட்டா் தொலைவுகளுக்கு நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். வெளிமாநிலங்களிலிருந்தும் வீரா்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், தொண்டி காவல் உதவி ஆய்வாளா் விஷ்ணு, தொண்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வைதேகி, சிறப்பு அழைப்பாளா்களாக ஆனந்த் மாஸ்டா், தொண்டி சுழற்சங்கத் தலைவா் திருநாவுக்கரசு, அறக்கட்டளைத் தலைவா் பாலா, செயலா் குணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT