ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 63 கிலோ குட்கா பறிமுதல்

27th May 2023 11:16 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 63 கிலோ குட்காவை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தினேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தைத் திடல் பகுதியில் காரிலிருந்து சாக்கு மூட்டைகளை சிலா் இறக்குவதை பாா்த்தனா். அப்போது போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்த 2 போ் தப்பி ஓடி விட்டனா்.

அந்த காரை சோதனையிட்ட போது அதில், 14 வெள்ளைச் சாக்கு மூட்டைகளில் 63 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.42 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து குட்கா, காா், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பி ஓடிய அமீன் (41), சோ்சிங் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனா். இவா்கள் மீது குட்கா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT