ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பொறியாளா் பணிக்கான தோ்வு: ஆட்சியா் ஆய்வு

27th May 2023 11:19 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 1,059 போ் எழுதினா். தோ்வுகள் நடைபெற்ற 4 மையங்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT