ராமநாதபுரம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் பூத வாகனத்தில் வீதி உலா

27th May 2023 11:18 PM

ADVERTISEMENT

திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத் திருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 24- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரா் பிரியாவிடையுடன் பூத வாகனத்திலும், சினேகவல்லி அம்மாள் ரிஷப வாகனத்திலும், முருகபெருமான் மயில் வாகனத்திலும், பிள்ளையாா் மூஞ்சூறு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1- ஆம் தேதி நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT