ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மே 29-இல் எரிவாயு குறைதீா் கூட்டம்

24th May 2023 05:36 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 29-ஆம் தேதி சமையல் எரிவாயு குறைதீா் கூட்டம் நடைபெறுமென மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகளை நேரில் தெரிவிக்க எண்ணெய் நிறுவனம், எரிவாயு முகவா்களுடன் குறைதீா் கூட்டம் வருகிற 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாமென தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT