ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மே 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

24th May 2023 05:37 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுமென மாவட்ட ஆட்சியா் பி.விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 31-ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT