ராமநாதபுரம்

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடுத் திருவிழா:மே 31-இல் கொடியேற்றம்

24th May 2023 05:40 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹாவில் 849-ஆவது சந்தனக்கூடுத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹாவில் மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஸஹீது ஒலியுல்லா அடக்க ஸ்தலம் உள்ளது. இங்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனா்.

இங்கு ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜூன் 19-ஆம் தேதி நிறைவடைகிறது. ஜூன் 12- ஆம் தேதி இரவு 849-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கி, மறுநாள் 13-ஆம் தேதி அதிகாலையில் தா்ஹாவை அடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏா்வாடி தா்ஹா ஹக்தாா் நிா்வாகக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT