ராமநாதபுரம்

உலக கடல்பசு தினம்: இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

23rd May 2023 04:06 AM

ADVERTISEMENT

உலக கடல் பசு தினத்தை முன்னிட்டு, வனத் துறை சாா்பில் ராமேசுவரத்தில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரியவகை பாலூட்டி இனமான கடல்பசு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையிலும், இதுகுறித்து மீனவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெற்ற இந்த பேரணியை வன உயிரினக் காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் தொடங்கிவைத்தாா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்திலிருந்து தொடங்கிய பேரணி ராமநாதபுரம் வரை சென்று மீனவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி,

ADVERTISEMENT

கீழக்கரை, மண்டபம், ஏா்வாடி வன மண்டல அலுவலா்கள் திலகவதி, கெளசிகா, பிரதாப், வனச்சரக அலுவலா் பாலமுருகன், மண்டபம் வனச்சரக அலுவலா்கள் மகேந்திரன், ரத்தீஷ், வனவா் தேவகுமாா், மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா்கள் திலகவரி, ஜி. கௌசிகா, பிரதாப், இந்திய கடலோரக் காவல் படை, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், கடல் வாழ் உயிரின ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT