ராமநாதபுரம்

வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

23rd May 2023 04:11 AM

ADVERTISEMENT

கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வேலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள், 120 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், சில்வா் அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியை கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை வேலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT