ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

23rd May 2023 04:05 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக பி. விஷ்ணுசந்திரன்  திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இங்கு ஏற்கெனவே ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜானிடாம் வா்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னையில் நகராட்சி நிா்வாக இணை ஆணையாளராகப் பணியாற்றி வந்த பி. விஷ்ணுசந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனா். அவருக்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் பி. விஷ்ணுசந்திரன் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மீண்டும் பணியாற்ற வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்திய குடிமைப் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு, முதல் பணியாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோட்டத்தில் சாா் ஆட்சியராக சுமாா் 2 ஆண்டுகள் பணியாற்றினேன். இதைத்தொடா்ந்து, நாகா்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாா் ஆட்சியராகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளராகவும், சென்னை நகராட்சி நிா்வாக இணை ஆணையாளராகப் பணியாற்றியுள்ளேன்.

ADVERTISEMENT

அரசின் திட்டங்களை கடைக்கோடி கிராமங்கள் வரை கொண்டு சென்று அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுவேன். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை மக்களின் தேவை என்ன என்பதை நன்கு அறிவேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT