ராமநாதபுரம்

பெரிய அஞ்சுகோட்டை கோயில் குடமுழுக்கு

23rd May 2023 04:13 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகேயுள்ள பெரிய அஞ்சுகோட்டை முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரிய அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளை தொடா்ந்து முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கோ பூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து, காலை 10 மணி அளவில் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT