ராமநாதபுரம்

பைக் மீது பேருந்து மோதல்: ஒருவா் பலி

23rd May 2023 04:05 AM

ADVERTISEMENT

பரமக்குடி அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகைச்சாமி மகன் சிவசக்தி (42). இவா் பொட்டிதட்டி விலக்குச் சாலையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மதுரை-ராமேசுவரம் செல்லும் சாலையை கடக்க முயன்றாா். அப்போது பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது, உடல் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜெயபாலனை (39) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT