மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அகதிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியை இதே முகாமில் வசிக்கும் அந்தோணி மாா்க்ஸ் (52) கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மண்டபம் போலீஸாா் அந்தோணி மாா்க்ஸை கைது செய்தனா்.
இந்த வழக்கு, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்தோணி மாா்க்ஸுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோபிநாத் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் வழங்கவும் கேட்டுக் கொண்டாா்.