ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் வரும் 26- ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களின் குறைதீா் கூட்டம் வரும் 26- ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைகேட்புக் கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது.
இதில், ராமநாதபுரம் மாவட்ட அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் பங்கேற்பதால் இந்த மாவட்டத்துக்குள்பட்ட மீனவா்கள் தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீா்வினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மீனவா்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.