ராமநாதபுரம்

பாஜக நிா்வாகி கொலை: கண்டித்து ஆா்ப்பாட்டம்

3rd May 2023 06:17 AM

ADVERTISEMENT

பாஜக பட்டியலின அணியின் மாநிலப் பொருளாளா் பி.பி.ஜி.டி.சங்கா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பாா்வையாளா் கே.முரளிதரன், பிரவீன்குமாா், பழனிவேல்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட பொதுச் செயலா்கள் மணிமாறன், பவா் நாகேந்திரன், பட்டியலின அணி பொறுப்பாளா்கள் கிங் பிரபு, இளங்கண்ணன், வாசுசேகா், மண்டபம் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டதாக முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT