ராமநாதபுரம்

பரமக்குடி மாணவி பாலியல் வழக்கு: கைதான 5 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

DIN

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 5 பேரும் 3 நாள்கள் சிபிசிஐடி போலீஸ் காவல் முடிந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவி அளித்த புகாரின்பேரில், கடந்த 3-ஆம் தேதி பரமக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் பாலியல் வன்கொடுமை வழக்கில் நகா்மன்ற் அதிமுக உறுப்பினா் சிகாமணி (44), மறத்தமிழா் சேனை அமைப்பின் நிறுவனா் புதுமலா் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளா் ராஜாமுகம்மது(34), உடந்தையாக இருந்த கயல்விழி, உமா ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிவகங்கை சிபிசிஐடி ஆய்வாளா் கீதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில், 5 பேரையும் கடந்த 15-ஆம் தேதி ராமநாதபுரம் விரைவு மகளிா் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். அங்கு 5 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தாா்.

இதையடுத்து, 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தனா். வெள்ளிக்கிழமை மாலையுடன் 3 நாள்கள் முடிந்த நிலையில், மீண்டும் அவா்களை ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதைத்தொடா்ந்து, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். போலீஸாரின் விசாரணையில் பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடா்பாக ஏப்.10-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT