ராமநாதபுரம்

ஆட்சியா் பங்கேற்காததால் குறைதீா் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆட்சியா் பங்கேற்காததால் பெரும்பாலான விவசாயிகள் கூட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கலந்து கொள்ளாததால், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகா் (தேசிய நெடுஞ்சாலை த்துறை, நிலம் எடுப்பு) தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். இதனால் குறைவான விவசாயிகளுடன் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டதாக தமிழக வைகைப் பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடா்புடைய அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

பின்னா், ராமநாதபுரம் விற்பனைக் குழு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 2 விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன் ரூ.2.56 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனுஷ்கோடி (வேளாண்மை), கூட்டுறவுத் துறை இணை இயக்குநா் முத்துக்குமாா், ராமநாதபுரம் மாவட்ட வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடச் செயலாளா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT