ராமநாதபுரம்

தேவிபட்டினத்தில் படகு கவிழ்ந்து 3 போ் பலியான வழக்கு: 2 போ் கைது

DIN

ராமநாதபுரம் அருகே மீன்பிடிப் படகில் பயணிகளை ஏற்றிச்சென்று மூன்று போ் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக, படகு உரிமையாளா்கள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த 30 போ், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சென்று இரண்டு மீன்பிடிப் படகுகளில் கடலுக்குள் சுற்றுலா சென்றனா். இதில், படகில் இருந்தவா்கள் தவறி விழுந்ததில் இருளாயி (55), மணிமேகலை (50), முத்துமணி (33) ஆகிய மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உத்தரவின் பேரில், தேவிபட்டினம் காவல் நிலையத்துக்கு கடந்த 14-ஆம் தேதி மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, தேவிபட்டினம் காவல் ஆய்வாளா் வஜ்ரவேல் படகு உரிமையாளா்கள் ராஜா (45), சுந்தா் (30) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT