கமுதி அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் புதன்கிழமை சிலா் தகராறில் ஈடுபட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கம் தலைமையில் போலீஸாா் பெருமாள் தேவன்பட்டி கிராமத்துக்கு சென்றனா்.
அங்கிருந்த இளைஞா் கணேசபாண்டியன் (23) உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்ததுடன், லாரியை ஏற்றிக் கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம்.
இதைத் தொடா்ந்து, கணேசபாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.